/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் இன்று 66 பள்ளிகள் மூடல்
/
சிங்கம்புணரியில் இன்று 66 பள்ளிகள் மூடல்
ADDED : நவ 18, 2025 04:05 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள 66 அரசு பள்ளிகளையும் இன்று ஒரு நாள் மூடி, அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்தில் உள்ள 66 அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 90 சதவீதத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் 66 பள்ளிகளையும் இன்று ஒட்டுமொத்தமாக மூட ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த காலங்களில் இவ்வொன்றியத்தில் 95 சதவீத பள்ளிகள் பூட்டப்பட்டு மாணவர்கள் திரும்பிச் சென்றதுண்டு. அதேபோல் இன்று காலை 10:00 மணிக்கு சிங்கம்புணரி பஸ் நிலையம் முன் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில், அனைத்து பள்ளிகளையும் மூடி தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரியப்படுத்த ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதேநேரம் இப்பள்ளிகளை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு திறக்க அலுவலர்களும் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

