ADDED : பிப் 23, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : கல்லல் ஒன்றியம் சிராவயலுக்கு நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் குடும்பத்தினருடன் குலதெய்வமான காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக வந்திருந்தார். அவருடன் ராதிகா, வரலட்சுமி மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
பின்னர் திண்டுக்கல் புறப்பட்டனர். அவர்களுடன் பங்கேற்றவர்கள் கேரவனில் திண்டுக்கல் சென்ற போது மாலை 5:00 மணிக்கு தம்பிபட்டி புறவழிச்சாலை சந்திப்பில், திருப்பதியிலிருந்து திருப்புத்துாருக்கு வந்த பஸ் மோதியது. 7 பேர் காயமடைந்தனர். தேனி மாவட்டம் பூமலைக்குண்டை சேர்ந்தவர்கள் திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.