/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆதார் எண், கைரேகை பதிய மார்ச் இறுதி வரை கெடு தமிழகத்தில் 81 லட்சம் பேர் விடுதல்
/
ஆதார் எண், கைரேகை பதிய மார்ச் இறுதி வரை கெடு தமிழகத்தில் 81 லட்சம் பேர் விடுதல்
ஆதார் எண், கைரேகை பதிய மார்ச் இறுதி வரை கெடு தமிழகத்தில் 81 லட்சம் பேர் விடுதல்
ஆதார் எண், கைரேகை பதிய மார்ச் இறுதி வரை கெடு தமிழகத்தில் 81 லட்சம் பேர் விடுதல்
ADDED : பிப் 11, 2025 07:49 AM
சிவகங்கை, : ரேஷன் கடைகளில் இலவச அரிசி பெறுபவர்கள் ஆதார் எண், கைரேகை, கண் புருவம் (இ---கே.ஒய்.சி.,பதிவு) பதிவு செய்யாவிட்டால், மார்ச் 31 க்கு பின் இலவச அரிசி ரத்து செய்யப்பட உள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாக மாதந்தோறும் அரிசி வழங்கப்படுகிறது.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள (ஏ.ஏ.ஒய்) ரேஷன் கார்டிற்கு தலா 35 கிலோ, ஏழை குடும்பத்தை சேர்ந்த குடும்ப (பி.எச்.எச்.,) கார்டிற்கு நபருக்கு 5 கிலோ அதிகபட்சம் கார்டுக்கு 20 கிலோ வரை இலவச அரிசி ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.
இலவச அரிசி பெறும், இவ்விரு பிரிவு கார்டுதாரர்களின் குடும்ப தலைவர், உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், கைரேகை, கண் புருவம் போன்றவற்றை அந்தந்த ரேஷன் கடைகளில் பதிவு செய்து, (இ- கே.ஓய்.சி.,) அனுப்ப மத்திய அரசு அறிவித்திருந்தது.
பலர் இன்னும் பதிவு செய்யவில்லை. மார்ச் 31 க்குள் பதிவு செய்யாவிடில் அவர்களுக்கு இலவச அரிசி ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3.56 கோடி பேருக்கு இலவச அரிசி
பொதுவினியோக திட்ட அதிகாரி கூறியதாவது: தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் 1 கோடியே 13 லட்சத்து 92 ஆயிரத்து 462 ரேஷன் கார்டுகளை சேர்ந்த 3 கோடியே 56 லட்சத்து 63 ஆயிரத்து 288 பேர் பயன்பெறுகின்றனர். இவர்களில் 2 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரத்து 502 பேரின் ஆதார் எண், கைரேகை, கண்புருவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 81 லட்சத்து 2 ஆயிரத்து 786 பேர் விபரம் பதியப்படாமல் உள்ளது. மத்திய அரசு மார்ச் 31 வரை அவகாசம் அளித்திருந்தாலும் தமிழகத்தில் பிப்., 28 க்குள் பதிவு உத்தரவிடப்பட்டுள்ளது. வீடு தோறும் சென்று பதிவு செய்ய இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன, என்றார்.

