ADDED : பிப் 18, 2025 05:03 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 3 ஆயிரத்து 982 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தமிழக அரசு சார்பில் பள்ளிக் கல்வி மற்றும்உயர் கல்வித்துறையில் மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் பயன்பெறும் வகையில் 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று தற்போது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும்ரூ.1000 உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் எனும் புதிய திட்டத்தை தமிழக முதல்வர் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் இத்திட்டத்தில் 3.28 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். இத்திட்டத்தின் கீழ் இடை நிற்றலின்றி உயர்கல்விக்கான படிப்பு காலம் வரை மாணவர்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் ரூ.1000 செலுத்தப்படும்.
சிவகங்கை மாவட்டத்தில் 46 கல்லூரிகளில் படித்து வரும் 3982 மாணவர்கள் இத்திட்டத்தின்மூலம் பயனடைந்து வருகின்றனர்.