/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் 880 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
/
தேவகோட்டையில் 880 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : அக் 13, 2024 04:43 AM

சிவகங்கை: தேவகோட்டையில் குடிமை பொருள் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் ரேஷன் அரிசி கடத்திய இருவரை கைது செய்து 880 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
தேவகோட்டை அருகே புளியால் பகுதியில் நேற்று காலை குடிமை பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர்.
சரக்கு வாகனத்தில் காலி பெட்டிகளை வெளியே வைத்து மறைத்து வைத்திருந்த 22 மூடைகளில் 880 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியது தெரிய வந்தது.
சரக்கு வாகன உரிமையாளர் தேவகோட்டை அருகே பகையானி கிராமத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் 46, திருவாடானை அருகே நாகவல்லிபுரம் டிரைவர் சரவணன் 49 ஆகியோரிடம் விசாரித்தனர்.
விசாரணையில் திருவாடானை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து மாட்டுத் தீவனக் கலவைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதாக கூறினர்.
போலீசார் அரிசியுடன் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.