sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றக்கூடியது புத்தகம்

/

மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றக்கூடியது புத்தகம்

மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றக்கூடியது புத்தகம்

மனிதனின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றக்கூடியது புத்தகம்


ADDED : பிப் 04, 2024 05:42 AM

Google News

ADDED : பிப் 04, 2024 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிப்பு/ நன்றாக வடிவமைக்கவும்/ செய்தி ஆசிரியர் விருப்பம்

பாக்ஸ்

\=====

வாசகர்கள் கவனம் ஈர்த்த புத்தகங்களில் சில...

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்

இந்த நுாலின் முதல் பாகம் வெளியிடப்பட்டு ஒரு பெரும் வரவேற்பை பெற்றுவிட்ட நிலையில் இதன் இரண்டாம் பாகமாக இந்த நுால் வெளியிடப்பட்டுள்ளது. மகாபாரதம் ஒரு உலகறிந்த புராணம் இதன் மூலக்கதையை பாமரனும் அறிவான். கௌரவர்கள் துரியோதனன் உடன் பிறந்த 100 பேர்களில் துச்சாதனனை தவிர நமக்கு தெரியாத பாத்திரங்களை தெளிவாக ஆசிரியர் இந்நுாலில் கூறியிருக்கிறார். இந்த இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள சத்தியவான் சாவித்திரியை படித்து நெகிழ்ந்தவர்கள் பலர் உண்டு. மகாபாரதத்தின் பல கதாபாத்திரங்களை தெரிந்து கொள்வதற்கு விரும்புபவர்கள் இந்த புத்தகத்தை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

ஆசிரியர்: இந்திரா சௌந்தரராஜன்வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்விலை: ரூ.430.

அன்பே அபிராமி

இன்றிலிருந்து ஏழு நாட்களுக்குள் தட்சகன் என்ற பாம்பு தீண்டி மரணம் அடைவாய், ஒரு முனிவர் ஒரு மன்னனுக்கு கொடுத்த சாபம் இது. சுகர் என்ற மகானிடம் போய் அழுதான் மன்னன் இந்த சம்பவத்தை நான் வரமாக மாற்றுகிறேன் என்று சொன்னார் சுகர். அந்த ஏழு நாட்களும் மன்னனுக்கு இறைவனின் அன்பை பற்றிய கதைகளை சொன்னார். சாவு வருவதற்கு முன்பே மரணம் இல்லாத பெருவாழ்வை பெற்று விட்டான் மன்னன். 29 வயது சாம்பவி அந்த மன்னனின் நிலையில் தான் இருந்தான். ஆனால் சாபம் கொடுத்த முனிவர் அல்ல. புற்றுநோயால் இன்னும் ஒரு மாதம் தான் வாழ போகிறோம் என்ற நிலையில் அபிராமி அந்தாதி பாடல்கள் கேட்க விரும்பினால் அந்த பெண். பாடல்களை இதயத்தை ஊடுருவும் கதைகள் மூலமாக விளக்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்தால் சாம்பவி. பச்சைப் புடவை காரி அந்த கோரிக்கையை எப்படி நிறைவேற்றினாள் என்பதை அன்பே அபிராமி என்னும் இந்த நுாலில் விவரிக்கிறார் ஆசிரியர்.ஆசிரியர்: வரலொட்டி ரங்கசாமி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்விலை: ரூ.350.

மண்ணும் மக்களும்,

மண்ணும் மக்களும் என்பது எளிய மக்களின் வாழ்க்கையை கூறும் தொகுப்பாக உள்ளது. நுாலை எழுதிய ஆசிரியர் அவரோடு பழகியவர்களின் நினைவுகளை கொண்டு இந்த நுாலை தொகுத்துள்ளார். இந்நுாலில் தம்மை நேசித்த, தாம் நேசித்த மனிதர்களில் தம் நெஞ்சுக்கு மிக நெருக்கமானவர்கள் பற்றி நினைவலைகளையெல்லாம் உருக்கமான வெளிப்பாடாக ஒவ்வொரு பக்கத்திலும் எழுதியிருக்கிறார். அரிக்கன் விளக்கு காலம் முதல் இன்றைய அயோடின் விளக்குக் காலம் வரை தாம் பார்த்த மனிதர்களை எல்லாம் அவர் படம்பிடித்துக் காட்டும்போது நம் பால்ய காலத்தில் பழகிய நண்பர்களும் பழகிக்கொண்டிருப்பவர்களும் நம் மனத்திரையில் வந்து முகம் காட்டுகின்றனர்.

ஆசிரியர்: இறையன்புவெளியீடு: கற்பகம் புத்தகாலயம்விலை: ரூ.260.

பார்த்திபன் கனவு

தேசம் முழுவதையும் ஒரே குடையின் கீழ் ஆட்சி புரிய வேண்டுமென விரும்பினான் பார்த்திபன். அக்கனவு அவனது வாழ்நாளில் நடந்ததா, அவனது தனயனும், துணைவியும் உற்ற மெய்யன்பர்களும் அக்கனவுக்கு எவ்விதம் வலிமை சேர்த்தார்கள். சோழப் பேரரசு எந்த மாமன்னன் காலத்தில் தேசம் முழுவதையும் ஒரே குடையின் கீழ் சிறப்பாக ஆண்டது. அதற்கு அவனது சந்ததி எத்தனை நுாற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்படி அடுக்கடுக்கான சரித்திர நிகழ்வுகளின் கனவே கல்கியின் முதல் பதிப்பு பார்த்திபன் கனவு.

ஆசிரியர்: கல்கி ஆர். கிருஷ்ணமூர்த்திவெளியீடு: மகாராஜா புக் ஹவுஸ்விலை: ரூ.220.






      Dinamalar
      Follow us