/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி
/
குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி
ADDED : ஆக 23, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனத்தில் குளிக்கச்சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
திருப்புவனம் புதுாரைச் சேர்ந்த கார் ஓட்டுனர் முகமது சியாத், இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இளைய மகன் தாஹீர் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் லாடனேந்தல் வைகை ஆற்றில் உள்ள தடுப்பணை அருகில் உள்ள பள்ளத்தில் தேங்கி கிடந்த தண்ணீரில் குளிக்க சென்றார். 20 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் குதித்தவர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார் உடன் வந்த சிறுவர்கள் உறவினர் களிடம் தெரிவித்தனர்.
தேடிய போது சிறுவனை கண்டறிய முடியவில்லை. மானாமதுரை தீயணைப்பு நிலைய வீரர்கள் உடலை மீட்டனர்.