ADDED : ஏப் 15, 2026 07:48 AM

அ நிறம் | அளவு
எஸ்.புதுார்: எஸ்.புதுாரில் பழுதடைந்த மின்கம்பத்தில் 'ஷாக்' அடிப்பதால் மக்கள் பயத்துடன் உள்ளனர்.
இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே மூன்று ரோடு சந்திப்பு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மின்கம்பம் உருக்குலைந்து, கான்கிரீட் கம்பிகள் தெரியும் நிலையில் உள்ளது.
மின்கம்பத்தின் உச்சியிலும் பழுதடைந்துள்ளதால் மழைக்காலங்களில் மின்கம்பம் முழுவதும் மின்சாரம் பாய்கிறது.
மேலும் காற்றடிக்கும் நேரத்தில் இந்த மின்கம்பம் ஆடுவதால் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழலாம் என்ற ஆபத்தான நிலை உள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடனே உள்ளனர். இந்த மின்கம்பத்தை மாற்ற பலமுறை வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை.
அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக பழைய மின்கம்பத்தை மாற்றி புதிதாக நட அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
