/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் தீப்பற்றி எரிந்த கார்
/
மானாமதுரையில் தீப்பற்றி எரிந்த கார்
ADDED : பிப் 04, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.
நேற்று மதுரையில் இருந்து வந்த கார் அந்த பங்க்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு சிறிது துாரம் சென்ற நிலையில் எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க இன்ஜினில் இருந்து புகை வந்ததை தொடர்ந்து காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கினர். உடனடியாக அங்கிருந்தவர்களும்,பெட்ரோல் பங்க் ஊழியர்களும் வந்து தீயை அணைத்தனர்.