ADDED : நவ 11, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நெடுமறத்தில் சரக்கு வேனும், காரும் மோதியதில் 4 பேர் காயமுற்றனர்.
மதுரையை சேர்ந்த பிச்சைப்பாண்டி மகன் சோனைமுத்து. இவர் நேற்று காலை காரில் புதுக்கோட்டையில் இருந்து மதுரைக்கு சென்றார். நேற்று காலை 7:00 மணிக்கு நெடுமறம் அருகே வந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சிங்கம்புணரியில் இருந்து வந்த சரக்குவேனில் மோதி விபத்திற்குள்ளானது. இதில், சரக்கு வேன் ரோட்டில் கவிழ்ந்தது.
சரக்கு வேனில் பயணித்த சிங்கம்புணரி காய்கறி வியாபாரிகள் காஜாமைதீன் மகன் முகமதுயூனிஸ் 20, நாகூர்ஹனிபா மகன் சாதிக்பாஷா 30, அப்துல்ரசீத் மகன் முகமதுமீராவும், காரில் வந்த சோனைமுத்துவும் காயமுற்றனர். கீழச்சிவல்பட்டி எஸ்.ஐ., சிவக்குமார் விசாரித்து வருகிறார்.