/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளத்துாரில் சிறுவர் பூங்கா அவசியம்
/
பள்ளத்துாரில் சிறுவர் பூங்கா அவசியம்
ADDED : அக் 19, 2025 04:12 AM
காரைக்குடி: பள்ளத்தூர் பேரூராட்சியில் பூங்கா அமைப்பதற்கு ,பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
பள்ளத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்நகரின் மக்கள் தொகை 13,000பேர். இங்கு, மகளிர் கல்லுாரி, 5 பள்ளிகள் செயல்படுகின்றன. மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை கொண்ட இந்த பேரூராட்சியில் பொழுதுபோக்கு அம்சமான பூங்கா, விளையாட்டு மைதானம் இல்லை. இங்கு பூங்கா அமைக்குமாறு மக்கள் பல ஆண்டாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இது வரை பூங்கா அமைக்க அரசு முயற்சிக்க வில்லை.
பள்ளத்துார் பேரூராட்சி தலைவர் சாந்தி கூறியதாவது, திருச்சி -- ராமேஸ்வரம் ரோட்டில் உள்ள இடத்தை பேரூராட்சி பெயருக்கு மாற்றம் செய்து தரும்படி கோரிக்கை வைத்து வருகிறோம். இடம் கிடைத்தால் பூங்கா, விளையாட்டு அரங்கம் கட்ட அரசுக்குகோரிக்கை வைக்கப்படும்.