/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் பயனின்றி கிடக்கும் கழிப்பிட கட்டடம்
/
காரைக்குடியில் பயனின்றி கிடக்கும் கழிப்பிட கட்டடம்
காரைக்குடியில் பயனின்றி கிடக்கும் கழிப்பிட கட்டடம்
காரைக்குடியில் பயனின்றி கிடக்கும் கழிப்பிட கட்டடம்
ADDED : நவ 11, 2025 03:42 AM
காரைக்குடி: காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டும், நோயாளிகள் பயன்பாட்டிற்கு வராமல் கிடக்கிறது.
காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ரயில்வே பீடர் ரோடு மற்றும் சூரக்குடி சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, அவசர சிகிச்சை உட்பட பல்வேறு பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது.
மருத்துவமனையின், புற நோயாளிகள் பிரிவு எதிரே கட்டண கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
சில மாதங்கள் மட்டுமே செயல்பட்டு வந்த கழிப்பறை கடந்த பல மாதங்களாக பயன்பாடின்றி பூட்டி கிடக்கிறது.
சிகிச்சைக்கு வரும் புற நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் கழிப்பறையை தேடி மக்கள் அலையும் சூழல் நிலவுகிறது.
கட்டண கழிப்பறையை முறையாக பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

