/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காட்சிப்பொருளாக சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம்
/
காட்சிப்பொருளாக சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம்
ADDED : பிப் 23, 2024 05:05 AM

காரைக்குடி : காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் செயல்படவில்லை. கொளுத்தும் வெயிலில் பயணிகள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, திருச்சி, ராமநாதபுரம், விருதுநகர்,
சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.மேலும் புதுவயல், கல்லல், தேவகோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளுக்கும் 30க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் சென்று வருகின்றன.
சுற்றுலாத்தலமான காரைக்குடிக்கு அதிக பயணிகள் வந்து செல்லும் புது பஸ் ஸ்டாண்டில் குடிநீர் வசதி இல்லை. தற்போது வெயில் காலம் தொடங்கிய நிலையில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
புது பஸ் ஸ்டாண்டில் பல லட்சம் செலவில் வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரமும் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. புது பஸ் ஸ்டாண்டில் பயன்பாடு இன்றி கிடக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.