ADDED : டிச 20, 2024 02:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்; திருப்புத்துார் அருகே மணிமுத்தாறு கடந்து செல்லும் ஆலவிளாம்பட்டி தரைப் பாலம் பொதுமக்கள் மீன்பிடிக்கும் தலமாக மாறி வருகிறது.
அண்மையில் பெய்த மழையில் மணிமுத்தாற்றில் நீர் பெருக்கெடுத்தது. இதனால் பட்டமங்கலத்திலிருந்து கல்லல் செல்லும் ரோட்டில் உள்ள தரைப்பாலத்தின் மீது நீர் சென்று போக்குவரத்து பாதித்தது. தற்போது சில நாட்கள் நீர் வடிந்து போக்குவரத்து மீண்டது.
இந்நிலையில் பாலத்தின் ஓரம் இளைஞர்கள், பெண்கள் கூட்டமாக நின்று மீன் பிடிக்கத் துவங்கியுள்ளனர்.
கரை புரண்டு ஓடும் தண்ணீரில் துள்ளி குதிக்கும் மீன்களை துாரி அமைத்தும், பரி, வலைகளால் ஜிலேபி, கெளுத்தி, கட்லா உள்ளிட்ட பெரிய மீன்களும், அயிரை, கெண்டை உள்ளிட்ட சிறிய வகை மீன்களையும் பிடித்துச் செல்கின்றனர்.