/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஏ.விளாக்குளம் கிராமத்தில் இன்று புரவி எடுப்பு விழா
/
ஏ.விளாக்குளம் கிராமத்தில் இன்று புரவி எடுப்பு விழா
ஏ.விளாக்குளம் கிராமத்தில் இன்று புரவி எடுப்பு விழா
ஏ.விளாக்குளம் கிராமத்தில் இன்று புரவி எடுப்பு விழா
ADDED : ஜூன் 24, 2024 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை:
ஏ.விளாக்குளம் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோயிலில் 2 வருடங்களுக்கு ஒருமுறை புரவி எடுப்பு விழா நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டு இன்று நடைபெற உள்ள விழாவிற்காககடந்த வாரம் முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து வருகின்றனர்.
மானாமதுரையில் ஏராளமான புரவிகள், சிலைகள் தயாராக உள்ளது. கிராமத்தினர் மாலை 4:00 மணிக்கு மேல் மேள, தாளங்கள் முழங்க மானாமதுரையிலிருந்து புரவிகளையும், சுவாமி சிலைகளையும் ஊர்வலமாக எடுத்து சென்று நிறைகுளத்து அய்யனார் கோயிலில் செலுத்த உள்ளனர். தினம்தோறும் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளன.