ADDED : ஜன 08, 2024 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாச்சியாபுரம் : திருப்புத்தூர் அருகே சிராவயல் புதூரில் உள்ள புதூர் ஊரணியை மேம்படுத்த வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஊரணியை சிராவயல் புதூர், தேனாட்சி அம்மன் கோயில், கீழையப்பட்டி ஆகிய பகுதியினர் பயன்படுத்தி வருகின்றனர். குடிமராமத்து பணியில் ஊரணி தூர் வாரப்பட்டுள்ளது.
ஆனால் சுற்றிலும் மண் கரையாகவே உள்ளது. இதனால் தற்போது குளிக்கப் பயன்படுத்துவதில் சிரமப்படுகின்றனர். ஊரணியை சுற்றி சுவர் மற்றும் படித்துறை கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.