/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி பஸ் ஸ்டாண்ட் எதிரே அறுந்து கிடந்த மின் வயர் *குச்சியில் துாக்கிப்பிடித்த வாலிபர்

ADDED : அக் 06, 2024 04:46 AM

காரைக்குடி : காரைக்குடி பஸ் ஸ்டாண்ட் எதிரில் நேற்று பெய்த கனமழை காரணமாக மின் வயர் சாலையில் அறுந்து விழுந்ததால், விபத்து ஏற்படாமல் இருக்க இளைஞர் ஒருவர் நீண்ட நேரம் மின் வயரை குச்சியில் துாக்கிப் பிடித்தபடி நின்றார்.
காரைக்குடி மற்றும் சுற்றுப் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்று இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது. இதில் நகரின் பல இடங்களிலும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. நேற்று காலை காரைக்குடி புது பஸ் ஸ்டாண்ட் எதிரே மின்சார வயர் அறுந்து கிடந்தது. இதனைக் கண்ட சிலர், உடனடியாக வாகனங்களை வேறு வழியில் மாற்றி விட்டனர். அறுந்து கிடந்த மின் வயரால் விபத்து ஏற்படாமல் இருக்க, இளைஞர் ஒருவர் நீண்ட நேரம் பஸ் உட்பட வாகனங்கள் செல்வதற்காக வயரை குச்சியால் தூக்கி பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்.
மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. மின் ஊழியர்கள் மின் வயரை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்பு வாகனங்கள் வழக்கம்போல் சென்றது.