/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் வாலிபர் அடித்து கொலை
/
தேவகோட்டையில் வாலிபர் அடித்து கொலை
ADDED : ஜன 03, 2024 06:13 AM

தேவகோட்டை: தேவகோட்டை ராம்நகரில் காரைக்குடி மெயின் ரோட்டில் கார் வாஷ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் அருகே உள்ள இச்சடி கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் ஜெகநாதன் 25, வேலை பார்த்து வந்தார்.
அதே நிறுவனத்தில் சென்னையைச் சேர்ந்த கோபி மகன் தமிழழகன் 25, மற்றும் தேவகோட்டை அருகே உள்ள கிராமத்தைச் 17 வயது சிறுவன் இருவரும் வேலை செய்கின்றனர்.
இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு புத்தாண்டை முன்னிட்டு மூவரும் நிறுவனத்தில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். பேச்சு வார்த்தை எல்லைமீறியதில் தகராறு ஏற்பட்டு உள்ளது. ஆத்திரமடைந்த தமிழழகன் மற்றும் சிறுவன் சேர்ந்து இரும்பு கம்பி, கட்டையால் ஜெகநாதனை தாக்கி உள்ளனர். இதில் ஜெகநாதன் உயிரிழந்தார்.
ஜெகநாதனின் தந்தை முத்து போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லத்துரை சம்பந்தப்பட்ட இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றார்.