நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மதகுபட்டி அருகே டூவீலரில் சென்ற இளைஞரிடம் இருவர் கத்தியை காட்டி மிரட்டி தங்க செயினை பறித்தனர்.
நாட்டரசன்கோட்டை அருகே கீரண்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி 34. இவர் கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு கட்டட பணியை முடித்துவிட்டு நாட்டரசன்கோட்டையில் இருந்து மேலமங்களத்திற்கு அய்யம்பட்டி வழியாக டூவீலரில் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத இருவர் லிப்ட் கேட்டுள்ளனர்.
திருப்பதி வண்டியை நிறுத்தியவுடன் அந்த நபர்கள் திருப்பதியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க செயினை பறித்து விட்டு அருகில் இருந்த கரும்பு தோட்டத்திற்குள் ஓடி மறைந்துவிட்டனர்.

