/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வளர்ப்பு நாயுடன் யாத்திரைஇளைஞரின் ஆர்வம்
/
வளர்ப்பு நாயுடன் யாத்திரைஇளைஞரின் ஆர்வம்
ADDED : ஜன 11, 2024 04:10 AM

திருப்புவனம் : செல்லப்பிராணியுடன் நாடு முழுவதும் உள்ள கோயில்களை தரிசிக்க உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் நடந்தே செல்ல திட்டமிட்டு கிளம்பியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் யாட்டி கவுர் 26, ஆன்லைனில் மார்க்கெட்டிங் பிசினஸ் செய்து வரும் இவருக்கு நாடு முழுவதும் உள்ள கோயில்களை நடந்தே சென்று தரிசனம் செய்ய திட்டமிட்டு 2023 ஜனவரியில் கிளம்பும் போது அவரது தெருவில் இருந்த நாய் குட்டியும் பின்னால் வந்துள்ளது.
அதனையும் அழைத்து கொண்டு 12 மாநிலங்கள் வழியாக நடந்து சென்றவர் ராமேஸ்வரத்தில் தரிசனம் முடித்து விட்டு மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலை வழியாக மதுரை மீனாட்சியம்மனை தரிசனம் செய்ய சென்றார்.
யாட்டி கவுர் கூறுகையில், தினசரி 50கி.மீ., வரை நடப்பதுடன் ஒவ்வொரு பத்து கி.மீ., தூரத்திற்கு ஒரு முறை சிறிது ஓய்வெடுத்து கொள்வேன். கோயில்களில் நாயை அனுமதிக்காததால் அந்தந்த பகுதியில் தங்கும் இடத்தில் விட்டு விட்டு நான் மட்டும் கோயிலில் தரிசனம் செய்து வருகிறேன், என்றார்.
நடந்து செல்லும் போதே ஆன்லைன் மார்க்கெட்டிங் பிசினசையும் பார்த்து கொள்கிறார். முற்றிலும் சொந்த பணத்தை கொண்டே நடைபயணம் மேற்கொண்டுள்ள இவர் 28 மாதங்களில் 12 ஆயிரம் கி.மீ., நடக்க திட்டமிட்டுள்ளார்.