/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தலைமை தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையம் துவக்கம்
/
தலைமை தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையம் துவக்கம்
தலைமை தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையம் துவக்கம்
தலைமை தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையம் துவக்கம்
ADDED : ஜன 06, 2024 05:58 AM
சிவகங்கை: சிவகங்கை, மானாமதுரை தலைமை தபால் நிலையங்களில் ஆதார் பதிவு, திருத்த சேவை துவங்கியுள்ளதாக சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.மாரியப்பன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, சிவகங்கை அஞ்சல் கோட்டத்தின் கீழ் சிவகங்கை, மானாமதுரையில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த மையம் செயல்பட்டு வருகிறது. தினமும் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை மையம் செயல்படும்.
இந்த மையங்களில் புதிய ஆதாருக்கு விண்ணப்பிக்க, வயது 5 முதல் 7, 15 முதல் 17 வயதினருக்கு கைரேகை, கருவிழி புதுப்பிக்க கட்டணம் இல்லை.
மற்ற நபர்கள் கைரேகை, கருவிழி புதுப்பிக்க ரூ.100, ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், அலைபேசி, இ- மெயில் மாற்றம் செய்ய ரூ.50, பத்து ஆண்டு ஆதாரை புதுப்பிக்காதவர்கள் பெயர், முகவரி சான்று இணைக்க ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
உரிய சான்றுகளுடன் தலைமை தபால் நிலைய ஆதார் சேவை மையங்களில் பயன்பெறலாம், என்றார்.