/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை கோயிலில் ஆடித் தேரோட்டம்
/
மானாமதுரை கோயிலில் ஆடித் தேரோட்டம்
ADDED : ஆக 06, 2025 08:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தேரோட்ட விழாவை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மன் சர்வ அலங்காரங்களுடன் மாலை 5:00 மணிக்கு தேருக்கு எழுந்தருளினார். ஏராளமானோர் தேரை வடம் பிடித்து நான்கு ரத வீதிகளின் வழியே இழுத்து வந்தனர்.
மாலை 6:00 மணிக்கு நிலையை அடைந்தது. தேருக்கு முன் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.