ADDED : ஜூலை 20, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டையில் ஆடிக் கார்த்திகையை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பால் தண்டாயுதபாணி சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன.
தி.ராம. சாமி. கோயிலில் வேலிற்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து மலர் அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. சவுபாக்ய துர்க்கையம்மன் கோயிலில் முத்துக் குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ராம்நகர் பாலமுருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. தண்டாயுதபாணி மலைக்கோயிலில் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. மற்றும் அனைத்து கோயில்களிலும் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன.