/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூரில் ஆடிக்கஞ்சிக் கலய விழா
/
திருக்கோஷ்டியூரில் ஆடிக்கஞ்சிக் கலய விழா
ADDED : ஆக 12, 2025 05:54 AM
திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் ஆடி கஞ்சிக்கலய விழா நடந்தது.
சிவகங்கை சமஸ் தானத்தைச் சேர்ந்த வடக்கு வாசல் செல்வி அம்மன் என்ற செல்லியம்மன் கோயிலில் ஆடியில் ஆடிக்கஞ்சிக்கலய திருவிழாவிற்காக 300க் கும் மேற்பட்ட பெண்கள் காப்புக்கட்டி, விரதம் துவங்கினர்.
நேற்று பெண்கள் கஞ்சிக்கலயம் சுமந்து ஊர்வல மாக சவுமியநாராயண பெருமாள் கோயில் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, முனியய்யா கோயில் வழியாக வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் வந்தனர்.
அங்கு கஞ்சிக்கலயங்களை அடுக்கி தீபாராதனை நடந்தது. மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் வகை யிலும், நேர்த்திக்கடன் நிறைவேற்றவும் பெண்கள் கஞ்சிக்கலயம் சுமந்தனர்.

