/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆடிவெள்ளி விழா முகூர்த்தக் கால் நடுதல்
/
ஆடிவெள்ளி விழா முகூர்த்தக் கால் நடுதல்
ADDED : ஜூலை 20, 2025 11:24 PM
திருப்புத்தூர்: திருப்புத்தூர் ராஜகாளியம்மன், ஆல மரத்தடி காளியம்மன் கோயில் ஆடி வெள்ளி விழாவிற்கான முகூர்த்தக் கால் ஊன்றும் விழா நடந்தது.
நகரின் மேற்கு எல்லைத் தெய்வமாக, பாலாற்று வழி வந்த காவல் தெய்வமாக காளியம்மன் கொண்டாடப்படுகிறார். ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறும். கடைசி வெள்ளியன்று பக்தர்கள் பால் குடம், அக்னி சட்டி எடுத்தும், பூக்குழி இறங்கியும், பல்வேறு அலகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவர்.
இவ்விழாவை முன்னிட்டு நேற்று கோயில் வளாகத்தில் முகூர்த்தக் கால் ஊன்றப்பட்டது. முன்னதாக மூலவர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து வெள்ளிக் கிழமைகளில் அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், மஞ்சள் அரைத்தல், வளைகாப்பு சார்த்தல் நடைபெறும்.
ஏற்பாட்டினை கோயில் நிர்வாகம், செட்டிய தெரு இளைஞர் குழுவினர் செய்கின்றனர்.

