ADDED : அக் 16, 2024 05:29 AM
சிவகங்கை, : சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள் விழா சர்வதேச மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி செயலர் சேகர் தலைமை வகித்து அப்துல்கலாம் படத்திற்கு மாலை அணிவித்து கண்காட்சியை துவக்கி வைத்தார்.
தலைமையாசிரியர் தியாகராஜன் வரவேற்றார். மாணவர்கள் தங்கள் படைப்பினை காட்சிப்படுத்தினர். உடற்கல்வி ஆசிரியர் தடியப்பன் சரவணன், பொறுப்பாசிரியர்கள் சந்திரசேகர், மகரஜோதி, சக்திவேல், ஜெயமணி, சுதிசந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் தெய்வானை தலைமை வகித்தார். ஆசிரியர் ராஜபாண்டி வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவி நித்யா கலந்துகொண்டார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி அப்துல்கலாம் பற்றி பேசினார். ஆசிரியர்கள் வாசுகி, வித்யா கலந்து கொண்டனர். ஆசிரியர் கமலாபாய் நன்றி கூறினார்.