/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்து : மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை
/
ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்து : மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை
ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்து : மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை
ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்து : மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை
ADDED : அக் 22, 2025 12:44 AM
சிவகங்கை: சிவகங்கையில் ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயத்தில் பயணிப்பதாக வாகன ஓட்டிகள் புகார் செய்த நிலையில் நேற்று முன்தினம் ரோட்டில் திரிந்த மாட்டின் மீது மோதி ஒரு குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிவகங்கை நகராட்சியில் மதுரை - தொண்டி ரோடு, மேலுார் ரோடு, திருப்புத்துார் ரோடு, காந்திவீதி, மஜித்ரோடு, பஸ் ஸ்டாண்ட், ஆயுதப்படை குடியிருப்பு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சுற்றித்திரிவதால் வாகன ஒட்டிகள் விபத்து அச்சத்தில் பயணிக்கின்றனர்.
நகரில் மதுரை ரோட்டில் சர்ச் எதிரே, மேலுார் ரோடு, அரண்மனை பகுதி, திருப்புத்துார் ரோடு கலெக்டர் ஆர்ச் எதிரே இரவு நேரங்களில் மாடுகள் சென்டர் மீடியனில் படுத்து கிடக்கிறது.
இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
அக்.3 இரவு கண்டாங்கி பட்டியை சேர்ந்த தவக்குமார் 37. இரவு 8:30 மணிக்கு வீட்டிற்கு மேலுார் ரோட்டில் சென்றார். கால்நடை மருத்துவமனையை தான்டி சென்ற போது ரோட்டின் குறுக்கே மாடு வந்ததால் மாட்டின் மீது மோதி தவக்குமார் கீழே விழுந்தார்.
இதில் காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு பணியில் இருந்த டாக்டர் பரிசோதித்ததில் தவக்குமார் இறந்ததாக தெரிவித்தனர். இதேபோல் கடந்த ஆண்டும் இதே ரோட்டில் மாட்டின் மீது மோதி ஒருவர் உயிரிழந்தார். நேற்று முன்தினம் மதியம் ஆயுதப்படை குடியிருப்பு ரோட்டில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் அருகே ஒருவர் தனது குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றார். அப்போது திடீரென மாடு குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கினர்.
குழந்தை உட்பட அந்த குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து ரோட்டில் சுற்றித்திரியும் மாடு நாய்களால் டூவீலரில் செல்வோர் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் பொறுப்பில்லாமல் ரோட்டில் விடும் மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.