/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேசிய நெடுஞ்சாலையில் திரியும் மாடுகளால் விபத்து
/
தேசிய நெடுஞ்சாலையில் திரியும் மாடுகளால் விபத்து
ADDED : ஜூலை 04, 2025 02:53 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தேசிய நெடுஞ்சாலையில் திரியும் கோயில் மாடுகளால் தொடர் விபத்து நடக்கிறது.
இங்குள்ள சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலுக்கு பக்தர்களால் நேர்த்திக் கடனுக்காக விடப்பட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றுவட்டாரங்களில் திரிகிறது. நகர் பகுதியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. காரைக்குடி -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் இம்மாடுகள் நடுரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக படுத்துக் கொள்கின்றன.
மாலை 6:00 மணிக்கு மேல் வரும் வாகனங்கள் மாடுகள் இருப்பது தெரியாமல் மோதி விபத்துக்குள்ளாகின்றன.
குறிப்பாக டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மாடுகளை பிடித்து பட்டிகளில் அடைத்து பராமரிக்கவும், மாடுகளின் மீது ஒளிரும் பட்டைகளை அணிவிக்கவும் மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்டவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.