/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டில் நெல் மூடைகளால் தேவகோட்டையில் விபத்து
/
ரோட்டில் நெல் மூடைகளால் தேவகோட்டையில் விபத்து
ADDED : பிப் 18, 2025 05:10 AM
தேவகோட்டை: தேவகோட்டை தாலுகாவில் விவசாய பணி முடிந்து தற்போது நெல் அறுவடை நடந்து வருகிறது.
விவசாயிகள் ஒரே நேரத்தில் அறுவடை செய்து நெல்லை பிரித்து எடுக்கும் பணியை செய்து வருகின்றனர். போதிய இட வசதி இல்லாத நிலையில் விவசாயிகள் நெற்கதிர்களை ரோட்டில் மூடைகளாக கட்டி வைக்கின்றனர்.
நெல் கொள்முதல் செய்யும் தனி நபர்கள் அந்த இடத்திற்கே வந்து கொள்முதல் செய்வதால் விவசாயிகள் ரோட்டில் நெல் மூடைகளை வைத்து விடுகின்றனர்.
ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோட்டிலும், சில இடங்களில் ரோட்டோரத்திலும் நெல் மூடைகளை அடுக்க வைக்கின்றனர். சிலர் நெல்லை ரோட்டிலேயே போட்டு கதிரடிக்கின்றனர். வாகனங்களில் வேகமாக வருவோர் நெல் மூடை இருப்பது தெரியாமல் மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.
பிப்.10ம் தேதி வாலிபர்ஒருவர் டூவீலரில் வேகமாக வந்து மாவிடுதிக்கோட்டை அருகே நெல் குவியலில் மோதி காயமடைந்தார்.
இதேபோல் புளியால் பஸ் ஸ்டாப் அருகே ரோட்டில் நிறுத்தி நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு இருந்த ஒரு டிராக்டர் மீது ராமநாதபுரத்தில் இருந்து வேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்களை தவிர்க்க ரோட்டில் நெல் மூடைகளை கட்டி பிரிப்பவர்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.