/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பழுதான வாகனங்களால் அதிகரிக்கும் விபத்து பாராமுகமாய் சுங்கச்சாவடி நிர்வாகம்
/
பழுதான வாகனங்களால் அதிகரிக்கும் விபத்து பாராமுகமாய் சுங்கச்சாவடி நிர்வாகம்
பழுதான வாகனங்களால் அதிகரிக்கும் விபத்து பாராமுகமாய் சுங்கச்சாவடி நிர்வாகம்
பழுதான வாகனங்களால் அதிகரிக்கும் விபத்து பாராமுகமாய் சுங்கச்சாவடி நிர்வாகம்
ADDED : அக் 12, 2024 04:36 AM

திருப்பாச்சேத்தி: மதுரை - -பரமக்குடி நான்கு வழிச்சாலையில் பழுதான வாகனங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தாததால் அடுத்தடுத்து விபத்து நடந்த வண்ணம் உள்ளது.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையும் அதன்பின் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வரை இருவழிச்சாலையும் அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது.
திருப்பாச்சேத்தி, போகலுார் ஆகிய இரு இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நான்கு வழிச்சாலையில் நிகழும் விபத்துகளில் சிக்கும் வாகனங்களை சுங்கச்சாவடியில் உள்ள மீட்பு வாகனம் உடனுக்குடன் சென்று மீட்டு அப்புறப்படுத்தி சாலைப்போக்குவரத்தை சரி செய்ய வேண்டும்.
விபத்தில் சிக்குபவர்களுக்கு சுங்கச்சாவடியில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மீட்டு மருத்துவமனைகளில் அனுமதிப்பதும் வழக்கம், ஒவ்வொரு வருடமும் ஒப்பந்தம் மாறும் போது புதிய ஒப்பந்தகாரர் வருவதற்கு இரண்டு மாதங்கள் ஆகின்றன.
அந்த இரு மாதங்களுக்கு நான்கு வழிச்சாலையில் நிகழும் விபத்துகளில் சிக்கிய வாகனங்களை மீட்க மீட்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனமும் வருவதில்லை. இதனால் அடுத்தடுத்து வரும் வாகனங்களும் விபத்தில் சிக்குகின்றன.
கீழடி விலக்கில் நேற்று காலை பழுதான காய்கறி வேனை மீட்க மீட்பு வாகனம் செல்லாததால் பின்னால் வந்த அரசு பஸ் மோதி காய்கறிகள் சேதமடைந்தது.
இதுபோல நான்கு வழிச்சாலையில் உள்ள கழிப்பறை, ஓய்வறை பூட்டப்பட்டுள்ளன.
விளக்குகளும் சரிவர எரிவதில்லை. எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நான்கு வழிச்சாலை பராமரிப்பு ஒப்பந்த காலங்களை நீட்டிக்க வேண்டும்.