/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் 9 சிற்றாறுகளை நம்பியே 1.25 லட்சம் எக்டேர் விவசாய நிலங்கள் பாதுகாக்க நடவடிக்கை தேவை
/
சிவகங்கையில் 9 சிற்றாறுகளை நம்பியே 1.25 லட்சம் எக்டேர் விவசாய நிலங்கள் பாதுகாக்க நடவடிக்கை தேவை
சிவகங்கையில் 9 சிற்றாறுகளை நம்பியே 1.25 லட்சம் எக்டேர் விவசாய நிலங்கள் பாதுகாக்க நடவடிக்கை தேவை
சிவகங்கையில் 9 சிற்றாறுகளை நம்பியே 1.25 லட்சம் எக்டேர் விவசாய நிலங்கள் பாதுகாக்க நடவடிக்கை தேவை
ADDED : ஜன 22, 2025 09:09 AM

சிவகங்கை : மாவட்டத்தில் 1.25 லட்சம் எக்டேர் நிலத்தை சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க, சருகணி ஆற்றில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாரும் பணியை மேற்கொள்வது போல், மற்ற 8 சிற்றாறுகளையும் பாதுகாக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் சருகணி, நாட்டாறு, நாட்டார் கால்வாய், உப்பாறு,பாம்பாறு,மணிமுத்தாறு, விருசுழி ஆறு, பாலாறு, தேனாறு ஆகிய 9 ஆறுகள் ஓடுகின்றன.
வடகிழக்கு பருவ மழை காலங்களில் இந்த ஆறுகளில் ஓடும் மழை நீர் ஆறுகளின் குறுக்கே உள்ள 55 அணைகளை நிரப்பி,622 கண்மாய்கள் மூலம் 1.25 லட்சம் எக்டேர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி பெறலாம்.
ஆனால், கடந்த சில ஆண்டாக மாவட்டத்திற்குள் ஓடும் 9 சிற்றாறுகள் துார்வாரப்படாமலும், ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் முட்புதர் மண்டிக் கிடக்கின்றன. குறிப்பாக ஆறுகளை ஆக்கிரமித்து வீடுகட்டியும், ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் பண்ணை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
இதனால், வடகிழக்கு பருவ மழை காலம் மட்டுமின்றி 2024ல் பெய்த மேலடுக்கு சுழற்சியால் பெய்த மழை என எந்த காலகட்டத்தில் மழை பெய்தாலும், ஆறுகளில் மழை நீர் செல்ல வழியின்றி முடங்கி விடுகின்றன. இதன் காரணமாகவே மாவட்டத்தில் விவசாய நிலங்கள் பெரும்பாலும் வறண்டு காணப்படுகின்றன.
எனவே மாவட்ட அளவில் சிற்றாறுகளை நம்பியே பாசன வசதிக்காக காத்திருக்கும் 622 கண்மாய்களுக்கு உட்பட்ட 1.25 லட்சம் எக்டேர் நில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க சிற்றாறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்றி துார்வாரி, ஆறுகளின் வரத்து கால்வாய் பகுதிகளை அகலப்படுத்த வேண்டும்.
முதல்வரின் தனி கவனம் அவசியம்
நீர்நில பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கிருஷ்ணன் கூறியதாவது: கலெக்டரின் முயற்சியால் சருகணி ஆறு துார் வாரப்படுகிறது.
அடுத்தபடியாக ஆக்கிரமிப்பு அகற்ற உள்ளனர். இதே போன்று மாவட்ட அளவில் உள்ள 9 சிற்றாறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை துார்வாரவும், 55 தடுப்பணைகளை சீரமைத்து, 1.25 லட்சம் எக்டேர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், தேவையான திட்டங்களை வகுத்து, செயல்படுத்த வேண்டும், என்றார்.