தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காரைக்குடிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்

 காரைக்குடிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்

 காரைக்குடிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்


ADDED : பிப் 16, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு அரசு சிறப்பு பஸ் இயக்கத்தை துவக்கியுள்ளது.

சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் காலை 5:40 மணிக்கு காரைக்குடியிலிருந்து புறப்படுகிறது. தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பயணிகள் பயன்படுத்துகின்றனர். அதிகாலையில் ரயில்வே ஸ்டேஷனுக்கு போதிய பஸ் வசதி இன்றி பயணிகள் சிரமம் அடைந்தனர்.

இதை தவிர்க்கும் விதமாக தேவகோட்டையில் இருந்து ரஸ்தா, அரியக்குடி, இலுப்பக்குடி, காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன், புது பஸ் ஸ்டாண்ட் வழியாக மதுரைக்கு செல்லும் வகையில் புதிதாக அரசு பஸ் இயக்கப்பட்டது. தினமும் அதிகாலை 4:20 மணிக்கு தேவகோட்டையில் புறப்படும் இந்த பஸ் 4:50 மணிக்கு காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் வந்து சேரும் விதமாக துவக்கியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us