/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எஸ்.புதுாரில் கூடுதல் மிளகாய் சாகுபடி
/
எஸ்.புதுாரில் கூடுதல் மிளகாய் சாகுபடி
ADDED : ஜன 07, 2025 04:44 AM
எஸ்.புதுார்: மாவட்டத்தில் மிளகாய் அதிகளவில் சாகுபடி செய்யக்கூடிய பகுதியாக எஸ்.புதுார் ஒன்றியம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் மிளகாய் விளைச்சல்இருந்தும் விலை கிடைக்கவில்லை, விலை கிடைத்தாலும் விளைச்சல் இல்லை என்ற நிலையே இருந்தது.
கடந்தாண்டு நெல் சாகுபடி விவசாயிகளுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். இந்தாண்டு விவசாயிகள்அதிக அளவில் மிளகாய் சாகுபடியை துவக்கி உள்ளனர். செட்டிகுறிச்சி, முசுண்டபட்டி, புழுதிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திகை பட்டத்தில் இதுவரை 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் குண்டு, சம்பா மிளகாய் நடவு செய்துள்ளனர்.
ஏற்கனவே தோட்டக்கலைத் துறை ஏற்பாட்டில் அமைத்துக் கொடுக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட நர்சரிகள் விவசாயிகளால் நடத்தப்படுகிறது. அவற்றில் மிளகாய் நாற்றுகளை வாங்கி வந்து விவசாயிகள் நடவு பணிகளை துவக்கி உள்ளனர்.
பெரும்பாலான இடங்களில் அடுத்த சில நாட்களில் மிளகாய் காய்ப்புக்கு வந்து விடும் நிலை உள்ளது. தற்போதும் பலர் புதிதாக செடிகளை நடவு செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு குறைந்தபட்சமாக ரூபாய் 20-ம் அதிகபட்சமாக ரூபாய் 90 வரை மிளகாய் விலை போனது.
இந்த ஆண்டு விளைச்சலும், விலையும் திருப்தியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் அதிக அளவில் மிளகாய் சாகுபடி செய்துள்ளனர்.

