/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாகனங்களை பராமரிக்க கூடுதல் நிதி ஓட்டுனர்கள் சங்கம் வலியுறுத்தல்
/
வாகனங்களை பராமரிக்க கூடுதல் நிதி ஓட்டுனர்கள் சங்கம் வலியுறுத்தல்
வாகனங்களை பராமரிக்க கூடுதல் நிதி ஓட்டுனர்கள் சங்கம் வலியுறுத்தல்
வாகனங்களை பராமரிக்க கூடுதல் நிதி ஓட்டுனர்கள் சங்கம் வலியுறுத்தல்
ADDED : பிப் 10, 2025 04:42 AM
சிவகங்கை: ''தங்கள் துறையிலுள்ள வாகனங்களை பராமரிக்க கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் ''என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அனைத்து வாகன டிரைவர்கள் தலைமை சங்க மாநில தலைவர் பெங்கியண்ணன் தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் கூறியதாவது: நெடுஞ்சாலை துறையில்15 ஆண்டுகள் முடிவடைந்து கோட்ட அலுவலகங்களில் கனரக வாகனங்கள் பராமரிப்பின்றி, நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வேலையில்லாத டிரைவர்களுக்கு முன்னுரிமை வழங்கி காலியாக உள்ள வாகனங்களுக்கு மாறுதலில் பணியமர்த்திட வேண்டும். கழிவு வாகனங்களுக்கு பதில் புதிய வாகனங்கள் கொள்முதல் செய்ய வேண்டும். ஆண்டு தோறும் டிரைவர்களுக்கு 3 செட் சீருடை, காலணி, காலுறை வழங்கவேண்டும்.
ஆண்டு தோறும் வழங்கப்படும், வாகன பராமரிப்பிற்கான நிதி தற்போதையை உதிரி பாகங்கள் வேலைகளுக்கான கூலி ஆகியவைகளுக்கு பற்றாக்குறை இருந்து வரும் காரணத்தினால், ஜி.எஸ்.டி.,க்கு அதிக பிடித்தம் செய்வதினாலும் வாகனங்ளை பராமரிப்பு செய்ய நிதி குறைவாகவே இருந்து வருகிறது. ஆகவே அரசு வரும் காலங்களில் வாகனத்தை பராமரிக்க கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். வட்ட அலுவலகங்களுக்கு உட்பட்ட வட்டம், கோட்டம், உட்கோட்டங்களில் பணிபுரியும் ஓட்டுநர்கள் 10 ஆண்டுகள் நிறைவுபெற்று தேர்வு நிலை பெற்றுள்ளனர். அவர்களுக்கு அரசு விதிகளின்படி ரொக்கபரிசு ரூ.500, சான்றும் வழங்க வேண்டும் என்றார்.

