ADDED : டிச 30, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: கோவை ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி சிறப்பு பூஜை பிப்.26ல் நடைபெற உள்ளது.
சிவராத்திரி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆதியோகி சிவன் சிலை அடங்கிய ரதம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. நேற்று காரைக்குடிக்கு ஆதியோகி சிவன் சிலை அடங்கிய ரதம் வந்தது. ஏராளமான பக்தர்கள் சிலையை வழிபாடு செய்து வரவேற்பு அளித்தனர்.

