ADDED : மார் 15, 2024 11:59 PM
சிவகங்கை: சிவகங்கை அருகே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது.கண்டாங்கிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாரிமுத்து, வட்டார கல்வி அலுவலர் பாலாமணி, கண்டாங்கிபட்டி ஊராட்சி தலைவர் மந்தக்காளை மாணவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இங்கு 5 வகுப்புகளில் 55 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். பள்ளிக்கு தேவையான குடம், மின்விசிறி, கடிகாரம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மீனாட்சி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சரண்யா, ஆசிரியர்கள் பிரேமா, யமுனா, காவியா பங்கேற்றனர்.
* சிவகங்கை அருகே மேலச்சாலுார் அரசு தொடக்க பள்ளியில் மாணவர் சேர்க்கை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாரிமுத்து தலைமையில் நடந்தது. வட்டார கல்வி அலுவலர் இந்திராணி, மேலசாலுார் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் எட்வின் செல்வராஜ், சாலுார் ஊராட்சி தலைவர் நாச்சம்மாள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை கலைச்செல்வி வரவேற்றார்.
புதிதாக சேர்ந்த 51 மாணவர்களை வரவேற்றனர். ஆசிரியர்கள் மகேஸ்வரி, செல்வராணி, மச்சராஜேஸ்வரி, வனிதா, கண்மணி, லீலாவதி, சிறுமலர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.
