/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை
/
அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை
ADDED : மே 24, 2025 11:18 PM
மானாமதுரை : மானாமதுரை அரசு ஐ.டி.ஐ.,யில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக முதல்வர் சேகர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
மானாமதுரை அரசு ஐ.டி.ஐ.,யில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 2வருட படிப்புகளான மோட்டார் மெக்கானிக், சர்வேயர்,எலக்ட்ரீசியன்,ரெப்ரிஜிரேட்டர் மற்றும் ஏ.சி.,மெக்கானிக் ஆகிய படிப்புகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் சேருபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவி தொகை,விலையில்லா சீருடைகள்,காலணிகள்,பாடபுத்தகங்கள், வரைபட உபகரணங்கள், பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
மேலும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகின்றன. 6 முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு மாதம்தோறும் உதவித் தொகையாக ரூ.1000 வழங்கப்படுகிறது. இப்பயிற்சிகளில் சேர விரும்புபவர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, 2பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், 2 நபர்களின் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் ஆன்லைன் மூலம் www.skilltranining.tn.gov.in என்ற இணையதளத்திலும், ராஜகம்பீரம் அருகே பாப்பாமடையில் உள்ள ஐ.டி.ஐ.,யிலும் நேரடியாக சேர்ந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.