/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் ஓட்டுச்சாவடி அலுவலருக்கான ஆலோசனை
/
சிவகங்கையில் ஓட்டுச்சாவடி அலுவலருக்கான ஆலோசனை
ADDED : செப் 25, 2024 04:22 AM
சிவகங்கை : சிவகங்கை எம்.பி., தேர்தலில் ஓட்டுப்பதிவு 40 சதவீதத்திற்கும் கீழ் பதிவான ஓட்டுச்சாவடிகளின் நிலை குறித்து ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். கலெக்டர் (பொது) பி.ஏ., முத்து கழுவன் முன்னிலை வகித்தார். சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை (தனி), திருப்புத்துார் ஆகிய 4 சட்டசபை தொகுதியில் உள்ள 1,357 ஓட்டுச்சாவடிகளில் இருந்தும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நடந்து முடிந்த எம்.பி., தேர்தலில் 40 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டு பதிவான ஓட்டுச்சாவடிகள் விபரங்களை சேகரித்தனர். அங்கு ஓட்டுப்பதிவு குறைவுக்கான காரணம் என்ன.
வாக்காளர்களை ஓட்டு அளிக்க ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், மாவட்ட அளவில் 78 ஆயிரம் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ள வாக்காளர்கள் உள்ளனர். இவர்களை வீடு தோறும் கண்டறிந்து, கூடுதல் வாக்காளர் அடையாள அட்டையை நீக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.