/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டுறவு பயிர் கடன் வழங்க ஆலோசனை
/
கூட்டுறவு பயிர் கடன் வழங்க ஆலோசனை
ADDED : அக் 02, 2025 03:41 AM
சிவகங்கை : சிவகங்கையில் கூட்டுறவு, உணவு, உணவு பொருள் வழங்கல் துறை, காலை உணவு திட்டம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.
கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார். கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமாமகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜா, துணை பதிவாளர் பாபு பங்கேற்றனர். மாவட்ட அளவில் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் பயிர், கால்நடை வளர்ப்பு, மீன் தொழில் சார்ந்த கடன் வழங்கும் அளவு குறித்து நிர்ணயிக்கப்பட்டது.
மாவட்ட அளவில் 63 விதமான பயிர்களுக்கு வழங்கப்படும் கடன் அளவு குறித்தும் முடிவெடுத்தனர். மேலும் பள்ளிகளில் செயல்படும் காலை உணவு திட்டம் தொடர்பாக பி.டி.ஓ.,க்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.