/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்பாச்சேத்தி கண்மாயில் ஆப்பிரிக்க தேன் கெழுத்தி மீன்
/
திருப்பாச்சேத்தி கண்மாயில் ஆப்பிரிக்க தேன் கெழுத்தி மீன்
திருப்பாச்சேத்தி கண்மாயில் ஆப்பிரிக்க தேன் கெழுத்தி மீன்
திருப்பாச்சேத்தி கண்மாயில் ஆப்பிரிக்க தேன் கெழுத்தி மீன்
ADDED : டிச 30, 2025 05:45 AM

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க தேன் கெழுத்தி மீன்கள் அடித்து வரப் பட்டுள்ளது.
ஆப்பிரிக்க தேன் கெழுத்தி மீன்கள் ருசியாக இருந்தாலும் அவற்றை சாப்பிட்டால் புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இந்த வகை மீன்கள் வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
விரைவாக வளர்ச்சி யடையும் தன்மை கொண்ட ஆப்பிரிக்க தேன்கெழுத்தி மீன்கள் மற்ற மீன்கள், நண்டுகள், நத்தைகள் உள்ளிட்டவற்றையும் விழுங்கி விடும் தன்மை கொண்டவையாகும்.
மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக வைகை ஆற்றில் அக்டோபர் முதலே நீர்வரத்து தொடங்கியது. நவம்பர் 2ம் தேதி சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரை விவசாயிகள் அந்தந்த பகுதி கண்மாய்களுக்கும் திருப்பி விட்டனர்.
திருப்பாச்சேத்தியில் உள்ள இரண்டு கண்மாய் களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை ஆற்றில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க தேன் கெழுத்தி மீன்களும் அடித்து வரப்பட்டு கண்மாய்களுக்கு வந்துள்ளன.
திருப்பாச்சேத்தி கண்மாயில் இருந்து மடைகள் மூலம் பாசனத்திற்கு திறக்கப்பட்ட போது பட மாத்தூர் ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் தண்ணீர் சூழ்ந்தது. தண்ணீர் வடிந்த நிலையில் அடித்து வரப்பட்ட ஆப் பிரிக்க தேன் கெழுத்தி ஆங்காங்கே குவிந்துள்ளன. சகதியினுள் கிடக்கும் இவற்றை யாரும் பிடிப்பத்தில்லை.
ஒவ்வொரு மீனும் குறைந்த பட்சம் ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வரை உள்ளது. கண்மாய் மற்றும் சகதிகளில் கிடக்கும் ஆப்பிரிக்க தேன் கெழுத்தி மீன் களை அழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

