ADDED : நவ 15, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: சோதுகுடியில் அம்பேத்கர் படம் வரைந்திருந்த இடத்தை சிலர் சேதப்படுத்தியதை தொடர்ந்து வி.சி.க.,மாவட்ட செயலாளர் பாலையா,மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ் வளவன்,நகரச் செயலாளர் அவையன், ஒன்றிய பொருளாளர் முனியாண்டி மற்றும் சோதுகுடி மக்கள் இளையான்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் சிவகங்கை டி.எஸ்.பி., இளையான்குடி இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.