ADDED : ஜூலை 24, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கையில் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கான வேளாண் கருவி பயிற்சி முகாம் நடந்தது.
சிவகங்கை வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். அமைச்சர் பெரியகருப்பன் விவசாயிகளுக்கு மானியத்தில் ரூ.60 லட்சத்திற்கான உழவு கருவி, டிராக்டர் உள்ளிட்டவற்றை வழங்கினார். கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், வேளாண் இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம், கலெக்டர் பி.ஏ.,(வேளாண்மை) தனலட்சுமி, தோட்டக்கலை துணை இயக்குனர் சத்தியா பங்கேற்றனர்.
விவசாயிகளுக்கு, வேளாண் கருவிகளை கையாளும் விதம், சோலார் பேனல் மூலம் மின்வசதி பெற்று, மோட்டார்களை இயக்குவது குறித்தும் பயிற்சி அளித்தனர்.