ADDED : செப் 23, 2024 06:19 AM
மானாமதுரை : மானாமதுரையில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பேரவை கூட்டம் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளர் பாஸ்கர், இ.கம்யூ., மாவட்ட செயலாளர் சாத்தையா, மாவட்ட துணைச் செயலாளர் மருது,மாவட்ட பொருளாளர் மணவாளன், மானாமதுரை ஒன்றிய செயலாளர் சங்கையா,விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், இ.கம்யூ., மானாமதுரை நகரச் செயலாளர் நாகராஜன்,தொழிற்சங்க நிர்வாகிகள் முத்துராமலிங்கம், கணேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை, கொள்ளை ஆகியவற்றில் போலீசார் தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைக்க வேண்டும், வைகை ஆற்றில் வளர்ந்துள்ள கருவேல் மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.