/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கைதானவர் மயக்கம்
/
அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் கைதானவர் மயக்கம்
ADDED : டிச 31, 2024 04:45 AM

சிவகங்கை: சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யகோரியும், தி.மு.க., அரசை கண்டித்தும் சிவகங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்தனர். மகாலில் தங்க வைக்கப்பட்டிருந்த நிர்வாகி ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சிவகங்கை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க., சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் இருந்து ரோட்டை மறித்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் முன் திருப்புத்துார் ரோட்டிற்கு வந்தனர். அவர்களை மறித்த போலீசார் ரோட்டின் ஓரத்தில் தள்ளி நிறுத்தினர்.
அங்கு அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சிறிது நேரம் மட்டுமே அனுமதித்த போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்.
அங்கு பணியில் இருந்த போலீஸ் ஒருவருக்கும் நகர செயலாளர் ராஜாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. டி.எஸ்.பி., அமலஅட்வின், இன்ஸ்பெக்டர் அன்னராஜா உள்ளிட்ட போலீசார் சமரசப்படுத்தினர். 327 ஆண்கள் 2 பெண்கள் உட்பட 329 அ.தி.மு.க.,வினரை கைது செய்து மகாலில் அடைத்தனர்.
கைதாகி இருந்த எஸ்.புதுார் ஒன்றிய ஜெ. பேரவை இணை செயலாளர் புழுதிப்பட்டி மெய்யப்பனுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர் கள்அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கற்பகம், நாகராஜன், உமாதேவன், குணசேகரன், நகர செயலாளர்கள் ராஜா, மெய்யப்பன், விஜிபோஸ், ராமசந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, கோபி, அருள் ஸ்டீபன், சிவாஜி, பழனிசாமி, அவை தலைவர் நாகராஜன், ஜெ பேரவை மாநில துணை செயலாளர் தமிழ்செல்வன், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன், பிர்லா கணேசன், சரவணன், குழந்தை, எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத்தலைவர் வக்கீல் ராஜா, நகர் அவை தலைவர் பாண்டி, தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் சங்கர் ராமநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.