ADDED : ஏப் 23, 2026 08:30 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:காளையார்கோவில் அருகே வடக்கு மாராந்தையை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி ரஞ்சித்குமார் 28. இவர் மேலச்சேத்துார் பூத் எண் 378ல் பூத் ஏஜன்டாக பணியாற்றியுள்ளார். அப்போது கூட்டணி கட்சியான பா.ஜ., நிர்வாகி அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் பா.ஜ.,வை சேர்ந்தவர்களுக்கு பூத் ஏஜன்ட் கொடுக்காமல் அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பூத் ஏஜன்ட்டாக உள்ளீர்கள் என்று கூறி ரஞ்சித்குமாருடன் பிரச்னை செய்துள்ளார்.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கினர். ராஜ்குமார் தாக்கியதில் ரஞ்சித்குமாருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
