/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அஜித்குமார் குடும்பத்திற்கு அ.தி.மு.க., ரூ.5 லட்சம்
/
அஜித்குமார் குடும்பத்திற்கு அ.தி.மு.க., ரூ.5 லட்சம்
அஜித்குமார் குடும்பத்திற்கு அ.தி.மு.க., ரூ.5 லட்சம்
அஜித்குமார் குடும்பத்திற்கு அ.தி.மு.க., ரூ.5 லட்சம்
ADDED : ஆக 04, 2025 12:29 AM

திருப்புவனம்; போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அஜித்குமார் குடும்பத்திற்கு அ.தி.மு.க., சார்பில் நிதி உதவி நேற்று வழங்கப்பட்டது.
ஜூலை 30ல் அஜித்குமார் குடும்பத்தினரை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி சந்தித்து ஆறுதல் கூறினார். அ.தி.மு.க., சார்பாக நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.
நேற்று மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அஜித்குமாரின் தாயார் மாலதியிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
நிகிதா நகை மாயமான வழக்கு நிலை என்ன அஜித்குமார் வழக்கில் புகார்தாரரான பேராசிரியை நிகிதாவின் நகை மாயமானது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரிப்பார்களா, நகை திருடியது யார் என தெரியவருமா என கேள்வி எழுந்துள்ளது.
பெயர் சொல்ல விரும்பாத சில போலீசார் கூறியதாவது: நிகிதா நகை மாயமானது குறித்து அஜித்குமார் மீது சந்தேகம் என புகார் கொடுத்தார். விசாரணையின் போது அஜித்குமார் இறந்தார். மீண்டும் நகை திருட்டு குறித்து விசாரிக்க வாய்ப்பில்லை.
நகை திருட்டு குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரிக்க தொடங்கினால் ஜூன் 27ல் நிகிதா திருமங்கலத்தில் இருந்து நகை அணிந்து கொண்டு தான் கிளம்பினாரா, நகையை எங்கு வைத்து கழற்றினார். ஸ்கேன் சென்டர் சென்றது எப்போது என பல்வேறு இடங்களில் விசாரிக்க வேண்டியிருக்கும்.
தற்போது சி.பி.ஐ., அதிகாரிகள் அஜித்குமார் மரணம் போலீசார் தாக்கியதால் மட்டுமா அல்லது வேறு காரணமாக என மட்டும் விசாரித்து முடித்து விடுவர் என்றனர்.