/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவக்கழிவு ஆலைக்கு அ.தி.மு.க., வினர் எதிர்ப்பு
/
மருத்துவக்கழிவு ஆலைக்கு அ.தி.மு.க., வினர் எதிர்ப்பு
மருத்துவக்கழிவு ஆலைக்கு அ.தி.மு.க., வினர் எதிர்ப்பு
மருத்துவக்கழிவு ஆலைக்கு அ.தி.மு.க., வினர் எதிர்ப்பு
ADDED : ஏப் 04, 2025 05:46 AM
மானாமதுரை: மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு மறு சுழற்சி சுத்திகரிப்பு ஆலை துவக்க அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மானாமதுரை ஒன்றியம், சூரக்குளம் பில்லறுத்தான் ஊராட்சியில் சிப்காட் வளாகத்தில் மருத்துவக்கழிவு மறுசுழற்சி சுத்திகரிப்பு ஆலை துவங்க கடந்த 2வருடங்களுக்கு முன்பு கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர். அப்போது அனைத்து தரப்பினரும் இந்த ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பின் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் சில வாரங்களாக சிப்காட் வளாகத்தில் ஆலை துவங்குவதற்காக கட்டுமான பணிகள் நடக்கிறது. இந்த ஆலை துவக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நாகராஜன், குணசேகரன், ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமாரிடம் புகார் அளித்தனர்.