/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அழகப்பா பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
அழகப்பா பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஆக 24, 2025 04:13 AM
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை கார்ப்பரேட் செகரட்டரி ஷிப் துறையுடன் காரைக்குடியில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் சி.எஸ்.சி., அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதன் மூலம் வணிகவியல் நிர்வாகவியல் கணினி சம்பந்தமான சான்றிதழ் டிப்ளமோ படிப்புகளை பல்கலை மாணவர்கள் கூடுதலாக படிக்க முடியும். மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை, கருத்தரங்கு, இன்டன்ஷிப் வழங்கப்படும்.
அழகப்பா பல்கலை சிண்டிகேட் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், பல்கலை துணைவேந்தர் ரவி புரிந்துணர்வு ஒப்பந்த ஆவணத்தை வழங்க காரைக்குடி சி.எஸ்.சி., அகாடமி இயக்குனர் நிக்சன் அசரியா, பல்கலை கார்ப்பரேட் செகரட்டரிஷிப் துறை பேராசிரியர் வேதிராஜன் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் பதிவாளர் செந்தில்ராஜன் தேர்வாணையர் ஜோதிபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.