/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அகில இந்திய மகளிர் கபடி: இன்று இறுதி போட்டி
/
அகில இந்திய மகளிர் கபடி: இன்று இறுதி போட்டி
ADDED : ஜூலை 19, 2025 11:44 PM

திருப்புத்துார்: திருப்புத்துாரில் தி.மு.க.,சார்பில் நடத்தப்படும் அகில இந்திய மகளிர் கபடிப் போட்டியில் 23 அணிகள் பங்கேற்றன. இன்று அரையிறுதி,இறுதி போட்டி நடைபெறுகிறது.
இந்திய கபடிக் கழக அனுமதி பெற்ற இந்த போட்டியில் டில்லி,ஹரியானா, சோனாபட், மும்பை, சண்டிகர்,கேரளா, மைசூர், மங்களூர், நாக்பூர், குஜராத், ரயில்வே அணிகள் உட்பட 23 அணிகள் பங்கேற்கின்றன.போட்டியை அமைச்சர்கள் பெரியகருப்பன், மெய்யநாதன் துவக்கி வைத்தனர்.
முதல் போட்டியில் சண்டிகர் அணியும் வி.எம்.பி.சென்னை அணியும் சந்தித்தன. அதில் சோனிபட் அணி 35:26 என்ற புள்ளிகள் பெற்று வென்றது.
தொடர்ந்து நடந்த போட்டிகளில் வடக்கு ரயில்வே அணி ஹரியானா சிஆர் அணியையும், கண்ணகிநகர் அணி கேரளா அணியையும்,சென்ட்ரல் ரயில்வே அணி பாரதி அணியையும், தென் ரயில்வே அணி நாக்பூர் போலீஸ் அணியையும், சாய் குஜராத் மைசூர் அணியையும், மங்களூர் அணி தானே எச்.எம்.சி. அணியையும்,சாய் சோனிபட் அணி டில்லி பிஎம் ஸ்போர்ட்ஸ் அணியையும் வென்றன.
இன்று கால் இறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி 'நாக் அவுட்' முறையில் நடக்க உள்ளன.