ADDED : ஜன 13, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அரசனுார் அம்மையப்பர் கார்மென்ட்ஸ் பணியாளர்கள் சார்பில் ரூ.35 ஆயிரம் மதிப்பில் கிரானைட் இருக்கை வழங்கப்பட்டது.
இந்த இருக்கைகள் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் மகப்பேறு மருத்துவமனை வார்டு முன் மக்கள் பயன்பாட்டிற்கு வைக்க உள்ளனர்.
நிகழ்வில் முதல்வர் சத்தியபாமா, கண்காணிப்பாளர் குமரவேல், நிலைய மருத்துவர் மகேந்திரன், உதவி நிலைய மருத்துவர் ரபி, தென்றல், அலுவலக கண்காணிப்பாளர் ரமேஷ் கண்ணன், கார்மென்ட்ஸ் மேலாளர் மதிக்குமார் கலந்து கொண்டனர்.